Tuesday, July 10, 2018

வெற்றிலை -மருத்துவ குணங்கள்

**** எல்லா இடங்களிலும் எளிதாக கிடைக்கும் வெற்றிலையில் உள்ள மருத்துவ குணங்கள்...!  வெற்றிச்செல்வன் ****



வெற்றிலையானது நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. புற்றுநோய்களில் இருந்து உடலை பாதுகாக்கிறது. அஜீரணத்தை நீக்கி செரிமானத்தை தூண்டுகிறது. உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய்நாற்றத்தை போக்குவதோடு, சிறுநீர் பெருக்கியாகவும் இருக்கிறது.
வெற்றிலையை மெல்லுவதினால், ஈறுகளில் இருக்கின்ற வலி, இரத்த கசிவு ஆகியவற்றை நீக்கி, ஆட்டம் காணும் பற்களையும் கெட்டியாக பிடிக்கும் நிலைக்கு ஈறுகளை தயார் செய்கிறது.

வெற்றிலை வயிற்றில் இருக்கும் வாயுவை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியது. நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்துவர ஞாபக சக்தியை அதிகரிக்கும்.

வெற்றிலை ரசம் தயாரிக்க:

தேவையான பொருட்கள்: வெற்றிலை, மிளகுப்பொடி, திப்பிலி, பூண்டு, பெருங்காயப்பொடி, உப்பு. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, நசுக்கிய பூண்டு, திப்பிலி, பெருங்காயப்பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்க்கவும். அதனுடன் நறுக்கிய வெற்றிலையை சேர்த்து கொதிக்கவிடவும். வெற்றிலை நன்கு வெந்ததும், ரசத்தை வடிகட்டி அருந்தலாம். டான்சில்ஸ், வீக்கம் போன்ற நோயால் பாதிக்கப்படுவோர் இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

வாயு தொல்லையை நீக்கி, உள்ளுறுப்புகளை தூண்டக்கூடிய வெற்றிலையில் வைட்டமின் சி சத்துக்கள் மற்றும் இரும்பு, கால்சியம், பொட்டாசியம் உள்ளிட்ட மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளன. வைட்டமின்களுடன், நார்ச்சத்தும் இருப்பதால் சீதள நோய்களை நீக்கி, உடல் இறுக்கம், குடல் புண்களை குணப்படுத்துகிறது.

– அனைவருக்கும் பகிருங்கள்

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட வெப்பாலையின் பயன்கள்...!

1. வெப்பாலை மருந்தாக பயன்படுகிறது. வெப்பாலை மரப்பட்டைச் சூரணம் ஓரிரு தேக்கரண்டி எடுத்துத் டீ நீராகப் பருகுகிறபோது பல்வேறு வயிற்று நோய்களைத் தணிப்பதாகவும் பயன் தருகிறது.
2. வெப்பாலை மரப்பட்டைச் சூரணத்தோடு 10 மிளகும் சுவைக்கென பனங்கற்கண்டும் சேர்த்து பருகும்போது, சருமநோய்களை விரைந்து குணப்படுத்துவதோடு காயங்கள் எவ்விதத்தினால் ஆயினும் அதை ஆற்றும் மருந்தாகிறது. காய்ச்சலைத் தணிவிக்கிறது. பேதி மற்றும் சீதபேதியைக் கட்டுப்படுத்துகிறது. பாம்புக்கடி விஷம், தேள்கடி, பூரான் கடி போன்றவற்றால் உண்டான விஷத்தை முறிக்கவல்லது.

3. குருதிக்கசிவு அதாவது ஆசன வாயினின்று வெளிப்படும் ஹெமராய்ட்ஸ் என்னும் ரத்தக்கசிவு, கருப்பையினின்று வெளியேறும் அதிகமான குருதிப்போக்கு, சிறுநீர்த்தரை வழியே வெளியேறும் குருதிக்கசிவு, இருமும்போது நெஞ்சகச் சளியோடு குருதி கலந்து வெளியேறுவது போன்ற அசாதாரண நிலைகளில் வெப்பாலைப் பட்டைச் சூரணமும் மிளகும் சேர்ந்த தீநீர் உடலை தேற்றும் உன்னத மருந்தாகிறது.

4. வெப்பாலைப் பட்டையைப் பசுமையாக இடித்துச் சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாறுடன் பசும்பால் சேர்த்துப் பருகி வர சிறுநீரக நோய்கள் பலவும் சீர்பெறும்.

5. வெப்பாலை இலைகளை அரைத்து விழுதாக்கி அக்கிப் புண்கள் பொன்னுக்கு வீங்கி என்று சொல்லப் பெறும் புட்டாலம்மை ஆகியவற்றின் வலியைக் குறைத்து வீக்கத்தைத் தணிவிக்கச் செய்யும். வெப்பாலை இலைகளை போதிய அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நான்கைந்து நாட்கள் நல்ல சூரிய ஒளி படும்படி வைத்து சூரிய புடமிட்டு வைக்க எண்ணெய் நன்கு நீல நிற வண்ணம் பெறும்.

6. இந்த எண்ணெயை வடித்து பாட்டிலில் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டு மேற்பூச்சாகப் பூசிவர உடலில் செதில் செதிலாகக் கொட்டி அரிப்பும், துர்நாற்றமும் மன உளைச்சலும் உண்டாக்கக்கூடிய தோல் நோயான சொரியாஸிஸ் குணமாகும்.

7. வெப்பாலை இலையோடு சிறிது உப்பு சேர்த்து மென்று சிறிது நேரம் வாயில் வைத்திருந்து துப்பிவிட பல்வலி பற்சொத்தை குணமாகும்.

– அனைவருக்கும் பகிருங்கள்

ஆரோக்கிய இதயம் தரும் செம்பருத்தி

செம்பருத்தியின் பூக்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் சிறந்ததாகும். இப்பூக்களின் தேநீர் அல்லது ஜூஸ் பருகுவதன் மூலம் இரத்த அழுத்தம் குறைகிறது.. ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள்கள் கொண்டுள்ளதால் உடலில் உள்ள செல் சேதத்தை எதிர்த்து போராடுகிறது. இது இருமல், முடி உதிர்தல் போன்ற சிகிச்சைக்கு உதவி புரிகிறது மேலும் முடி அதிகமாக வேண்டும் என விரும்புபவர்கள் செம்பருத்தியின் எண்ணெய், ஷாம்பு, கண்டிஷனர் போன்று உபயோகப்படுத்தலாம்.

ஆரோக்கியமான உடலுக்கு தேவையான வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது-. இப்பூக்களில் வைட்டமின் சி மற்றும் தாதுக்கள் கொண்டுள்ளது. இதயம் மற்றும் நரம்பு மண்டலத்துக்கு தேவையான சுகாதார நலன்களை வழங்குகிறது. எடை கட்டுபடுத்தும் செயல்களை மேற்கொள்கிறது-. நினைவாற்றலை மேம்படுத்தும், செரிமான பிரச்சனைக்கு தீர்வாகவும் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஒரு கப் செம்பருத்தி பூவின் தேநீர் கொழுப்பை குறைக்கிறது. செம்பருத்திப் பூ இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.

வயிற்றுப்புண், வாய்ப்புண்ணைக் குணமாக்கும். (பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.) கருப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும்.

பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள். மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும். வெள்ளைப்படுதலைக் குணமாக்கும். செம்பருத்தியின் இதழ்களை கசாயம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் குணமாகும்.

எடையைக் குறைக்க ஓர் எளிய வழி..!

ஒரு நாளைக்கு 4 கப் காப்பி குடித்தால் அவர்களின் எடை குறைய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். காப்பி குடிப்பது என்பது உலகம் முழுவதும் பரவலாக நடப்பது ஒன்றாக உள்ளது. அதேபோல் பெண்களின் எடையை குறைக்க உதவும் ஒரு வழியில் இதுவும் ஒன்றாக உள்ளது.

இதற்காக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடந்த 26 வருடங்களாக 86 ஆயிரம் நர்ஸ்களை கணக்கில் கொண்டு அவர்களை கண்காணித்தனர். ச்சரியப்படும் வகையில் அதிக அளவில் காபியை குடித்தவர்களுக்கு குறைந்த அளவே சதை போட்டிருந்தது.

தினந்தோறும் 4 கப் காப்பி குடித்து வந்த பெண்களில் 57 சதவீதத்தினர் குறைந்த அளவே எடை கொண்டிருந்ததையும், 2 முதல் 3 கப் காப்பி குடித்தவர்களில் 22 சதவீத அளவே எடை குறைந்திப்பதையும் கண்டறிந்தனர்.

சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்... அதில் உள்ள 'அலைல் புரோப்பைல் டை சல்பைடு' என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

சுக்கு மருத்துவக் குணங்கள்:-

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.

No comments:

Post a Comment