Tuesday, July 10, 2018

இதயத்தை வலுவாக்கும் செம்பருத்தி மணப்பாகு

***** இதயத்தை வலுவாக்கும் செம்பருத்தி மணப்பாகு *****


** செய்முறை:-

25 எலுமிச்சம் பழங்களை பிழிந்து சாற்றை வடித்து அதில், 100 செம்பருத்திப் பூக்களின் இதழ்களை ஊற வையுங்கள். தினம் தோறும் சில முறை கரண்டியால் புரட்டி விடுங்கள். மூன்று நாட்களில் மசிந்து விடும். அதை துணியில் பிழிந்து வடித்து வையுங்கள்.

பின், இரும்புச் சட்டியில் ஊற்றி மெல்லிய தீயில் சூடாக்கி பின் சம அளவு நல்ல தேன் கலந்து  வைத்துக் கொள்ளுங்கள். 6 மாதங்களுக்கு மேல் பாதுகாத்து வைக்கலாம்.

இதில் 15 மில்லி முதல் 30 மில்லி வரை இரண்டு பங்கு தண்ணீர் கலந்து குடிக்க கீழ்க்கண்ட பலன்கள் கிடைக்கும்.


** பலன்கள்:-

இது இதயத்தை வலுவாக்குவதில் நிகரற்றது. இதயத்தில் ஓட்டை விழுந்துள்ளது என கூறப்படும் துன்பத்தை கூட விரைவில் சரிசெய்யும். 

கல்லீரல்  வீக்கத்தை சுகமாக்கும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு வரும் பாத புண்கள், பெருவிரல் புண்களை ஆற்ற உதவும்.

மகளிர்க்கு வரும் மாதந்திர தூய்மையை முறைப்படுத்தும்.

குழந்தை பெற விரும்புவோர் ஆண், பெண் இருவரும் சாப்பிட பெண்களின் சினை முட்டை வலுவாகும், ஆண்களுக்கு விந்தாற்றல் மேம்படும்.

குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட  நல்ல நினைவாற்றல் கிடைக்கும்.

⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜⚜

No comments:

Post a Comment