Monday, August 6, 2018

இன்றைய மருத்துவம்

ஐந்து நாட்களுக்கு, தொடர்ந்து 4 கிளாஸ் ஆப்பிள் ஜூசையோ அல்லது தினமும் 4 அல்லது 5 ஆப்பிள்களை உண்டுவரவும். பித்தப்பையில் உள்ள கற்களை மிருதுவாக்க, ஆப்பிள் ஜூஸ் உதவும்.

ஆறாம் நாளில், மாலை 6 மணி மற்றும் இரவு 8 மணிக்கு சுடுநீரில் எப்சம் உப்பை (மெக்னீசியம் சல்பேட்) கலந்து குடிக்கவும்.

எப்சம் உப்பு, பித்தப்பை குழாய் திறப்பை எளிதாக்கும்.

இரவு 10 மணிக்கு, அரை கோப்பை ஆலிவ் எண்ணெய் அல்லது எள்ளு எண்ணெயை, அதே சம அளவுள்ள எலுமிச்சை சாறுடன் நன்கு கலக்கி குடிக்கவும். இது பித்தப்பை குழாய் வழியே, கற்கள் வெளியேற வழிவகுக்கும்.

அன்றைய தினத்தில், இரவு நேர உணவை தவிர்க்க வேண்டும்.

மறுநாள் காலை, இயற்கை உபாதையில், பச்சை நிற பித்தப்பை கற்கள் வெளியேறி இருப்பதை காணலாம்.

கருப்பு கொண்டைக்கடலையின் ஊட்டச்சத்து

கறுப்பு கொண்டைக்கடலையில் போலி அமிலத்துக்கு அடிப்படையான போலேட்டும் மக்னீசியமும் போதுமான அளவில் உள்ளன. இது மாரடைப்பு காரணியான ஹோமோசிஸ்டினை கட்டுக்குள் வைத்து, அந்நோய் வராமல் பாதுகாக்கும் உன்னத உணவு.

கர்ப்பிணிகளுக்கு அவசியத் தேவையான ஃபோலிக் அமிலம், ஆன்டிஆக்சிடண்ட் தன்மை கொண்ட சாப்போனின் போன்ற ஃபைட்டோ வேதிப்பொருட்கள் அதிகமுள்ளன.

வெள்ளைக் கொண்டைக்கடலையைவிட இதில் நார்ச்சத்து அதிகம், சர்க்கரையை வெளியிடும் பண்பு குறைவு.

குளுகோஸ் பயன்பாட்டை மேம்படுத்தக்கூடியது என்பதால் நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ச்சியாகச் சாப்பிடலாம்.

இதன் சாறு இரும்புச்சத்து நிரம்பியது. இரும்புச் சத்து குறைபாடு, ரத்தசோகையைத் தடுக்க உதவுகிறது.

இதில் இரும்புச்சத்து, சோடியம், செலெனியம், சிறிதளவு துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம் போன்ற கனிமச்சத்துகள் உள்ளன.

அளவுடன் சாப்பிட்டால் செரிமானக் கோளாறு, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுமந்தம் தீர்க்க உதவும்.

வேக வைத்த கறுப்புக் கொண்டைக்கடலை ஒரு கப் 269 கலோரி சக்தியைத் தரும். அதேநேரம் இதில் இருக்கும் 15 கிராம் புரதம், ஒரு நாளைக்குத் தேவையான 2000 கலோரி உணவில் 30 சதவீதத்தை ஆரோக்கியமான வகையில் தரக்கூடியது.

சுக்கின் மருத்துவப் பயன்கள் !! நமக்கு ஏற்படும் பல நோய்களுக்கு நமது வீட்டில் உள்ள உணவுப் பொருள்களே சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. எனவே அவைகளில் ஒன்றான சுக்கின் மருத்துவப் பயன்களைப் பற்றி இங்கு தெரிந்துக்கொள்வோம். 👉 சுக்கு, ஐந்து மிளகு மற்றும் ஒரு வெற்றிலை சேர்த்து மென்று சாப்பிட்டு, ஒரு டம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும். 👉 சிறிதளவு சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும். 👉 சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து, சுக்குநீர் காய்ச்சிக் குடித்து வந்தால் உடல் அசதி மற்றும் சோர்வு நீங்கி சுறுசுறுப்பு உண்டாகும். 👉 சுக்குடன், கொத்தமல்லி சேர்த்து கஷாயம் செய்து பருகினால் மூலநோய் குணமடையும். 👉 தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி சேர்த்து சாப்பிட்டால், வயிற்றுப்புண் சரியாகும். 👉 தினந்தோறும் சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கி வந்தால் பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் நீங்கும். 👉 சிறிதளவு சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று சாப்பிட்டால் வாயுத்தொல்லை நீங்கும். 👉 எலுமிச்சைச் சாறுடன் சிறிதளவு சுக்கின் தூளைக் கலந்து குடித்தால் பித்தம் விலகும். 👉 சுக்குடன் சிறிது பால் சேர்த்து, நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனை நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறியதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமடையும். 👉 சுக்குடன் சிறிதளவு வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி தொல்லை சரியாகும். 👉 சுக்கு, மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினந்தோறும் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவந்தால் விஷக்காய்ச்சல் குறையும். 👉 சுக்கு, மிளகு மற்றும் சீரகம் சேர்த்து எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவந்தால் நீர்க்கோவை நீங்கும். 👉 சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி முற்றிலும் குணமாகும். 👉 சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று சாப்பிட்டால் தொடர் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் சரியாகும.

No comments:

Post a Comment